Facebook- என்னும் பூதம்

facebook
கடந்த மாதம் Facebook - ன் நன்மைகளை அலசினோம். இந்த மாதம் Facebook – ஆல் ஏற்படும் / ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்ப்போம்.
Facebook - ஆல் இதுவரை ஏற்பட்டுள்ள சில விஷயங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
1. தனது தினசரி நடவடிக்கைகளை (daily activities) பதிவேற்றம் செய்தவர்கள் பலர் தங்களது நகை, வாகனங்களை பறிகொடுத்துள்ளார்கள்.
2. பெண் என நினைத்து ஆணிடம் (Fake ID) பல மணிநேரம் தங்களது நேரத்தையும், பொருட்களையும் இழந்த ஆண்கள் & இளைஞர்கள் பலபேர் விரக்தியினால் மனநோய்களுக்கு ஆளானதும், அதில் ஒரு சிலர் தற்கொலைக்கு முயன்றதும் நடந்திருக்கிறது.
3. ஒரு சில ஊர்களில் கல்லூரி மாணவர்கள் இரவு முழுவதும் இணையத்திலும், குறிப்பாக Facebook-ல் கழிப்பதை பார்க்க முடிகிறது. அதனால் மனிதனுக்கு மிக பயன் தரக்கூடிய அதிகாலை (சூரிய உதயம்) நேரத்தின் பயன்கள் தவற விடப்படுகின்றன. நமது சமுதாய சொந்தங்களுக்கு மிகவும் வலியுறுத்தப்பட்ட ஃபஜ்ர் தொழுகை தவற விடப்படுகிறது. (அல்லாஹ் காப்பாற்றுவானாக!). அதிகாலை நேர இயற்கை சுவாசம் (உயிர்க்காற்று) எவ்வளவு இனிமையானது!
4. உணர்ச்சிப்பெருக்கில் Facebook - ல் நமது இளைஞர்கள் பகிரும் சில விஷயங்கள், அதற்கான எதிர்வினைகள் ஆகியவை மிகப்பெரும் சிக்கலாக வந்தது நாம் அறிந்ததே.
5. இறைவன் அளித்த மிகப்பெரும் அருட்கொடையான நேரம் அதிக அளவில் வீணாவதை பார்க்க முடிகிறது. (புத்தகங்கள் வாசிப்பு குறைந்து போனது ஒரு உதாரணம்)
Facebook பற்றிய அடிப்படை செய்திகள் சிலவற்றை நாம் தெரிந்திருப்பது அவசியம்.அவை :
1. பேஸ்புக்கை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் (Adults) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் 5.5 கோடி இந்திய சிறுவர்/சிறுமியர் (Minor Accounts) பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள் என ஆய்வு முடிவுகள் நம்மை பயமுறுத்துகின்றன.
2. 90% பெண்களுக்கு எதிரான இணையக் குற்றங்கள் பேஸ்புக் மூலமே நடைபெறுகிறது.
3. இது உலகின் அதிக மக்கள் பயன்படுத்தும் விளம்பர (Advertising website) வலைதளம். காரணம் உங்களின் விருப்பு, வெருப்பு அனைத்தும் அவர்களுக்கு தெரியும். (அதற்கான எல்லா தகவல்களையும் நாமே விருப்பத்துடன் தந்து விடுகிறோம் என்பது ஊரறிந்த ரகசியம்)
4. Facebook account தொடங்குவதற்கு தேவை உங்களின் சரியான பிறந்த தேதி அல்ல, ஏதேனும் ஒரு தேதிதான். இதில் மிக கவலையான விஷயம் என்னவென்றால் நாம் Facebook-ல் தான் மிக உண்மையாக நடந்து கொள்கிறோம். நம்முடைய எல்லா உண்மையான தகவல்களையும் (வீட்டு முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள்) தந்து விடுகிறோம்,
5. ஒரு சிலர் வெளிநாடு/வெளியூர் செல்வதை மிகப் பெருமையாக உடனுக்குடன் update செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். உங்கள் வீட்டில் யாரும் இல்லை என்பதை யாருக்கு தெரிவிக்கிறீர்கள் ? தயவுசெய்து ஒரு நிமிடம் யோசித்து பிறகு பகிரவும்.
6. அதே போல் புதிய பொருட்கள் (கார், வீடு, நகை, பைக், ATM கார்டு) வாங்குவதையும் உடனுக்குடன் update செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். உங்கள் வீட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை பழக்கமில்லாதவர்களுக்கு தெரியப்படுத்த ஏன் இவ்வளவு ஆர்வம்? பொருட்கள் களவு போவதை ஊக்குவிக்கிறீர்களா ?
7. ஆய்வின் முடிவுகள் பேஸ்புக்கில் உள்ள 30-40 % கணக்குகள் போலியானவை என பயமுறுத்துகின்றன. எனவே பேஸ்புக்கில் உள்ள எல்லோரும் நல்லவர்கள் அல்ல என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

Facebook – ல் பாதுகாப்பாக இயங்குவது எப்படி ?
• தயவு செய்து உங்களது தனிப்பட்ட புகைப்படங்களை (Personal/Private Photos) பகிர வேண்டாம்.
• தயவு செய்து உங்களின் எல்லா இரகசியங்களையும், தன் விவரங்களையும் Facebook – ல் சொல்ல வேண்டாம்.
• உணர்ச்சிவசமான விஷயங்களில் (Sensitive Issues) எந்த ஒரு பதிவையும் போடும் முன் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து பதிவிடவும் அல்லது பதிலளிக்கவும். ஏனெனில் உங்களது ஒரு பதிவு மொத்த சமூகத்தையும் பாதிக்கக் கூடும்.
• தினசரி விஷயங்களை தெரிவிக்க வேண்டாம். (வெளியூர்/வெளிநாடு செல்வது, செல்லும் வாகனத்தின் விவரம், புதிதாக பொருள் வாங்கியது பற்றிய விவரங்கள்)
• உங்கள் குழந்தைகளின் விவரங்கள் & அந்தரங்க விஷயங்களை பகிர வேண்டாம். முக்கியமாக குழந்தைகளின் பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர் (அடையாள அட்டையோடு) போட வேண்டாம்.
• பெண்களே தயவுசெய்து தெரியாத நபர்களின் நட்பு வேண்டுதலை Unknown Friend Request (accept) ஏற்றுக்கொள்ளாதீர்கள். Facebook - ல் அதிகமான நண்பர்கள் இருப்பதை விட நல்ல நண்பர்கள் இருப்பதே சாதனை என்பதை பெண்கள் உணர வேண்டும்.
• வங்கிக் கணக்கு எண், கடவுச்சொல், ATM கார்டு எண் போன்றவற்றை பகிர வேண்டாம். (இதனால் பணத்தை இழந்தவர்கள் பலர்)
• Facebook – கிற்கு பயன்படுத்தும் மின்னஞ்சல் விவரங்களை (Gmail account) வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம்.
• உங்களது Gmail/Facebook/Twitter போன்றவற்றின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை (Username and Password) வேறு யாருடனும் பகிர வேண்டாம்.
• Gmail/Facebook/Twitter ஆகியவற்றின் Settings–ல் Security Settings-யை முழுமையாக சோதனை செய்யவும். (ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்)
• பேஸ்புக்கில் உங்களைப் பற்றிய தவறான தகவல்கள் / புகைப்படங்கள் / வீடியோக்கள் பகிரப்பட்டால் பயப்படத்தேவையில்லை. (Report option) புகார் வாய்ப்பை பயன்படுத்தவும். அதிகபட்சம் ஒரு வார காலத்திற்குள் அந்த புகைப்படம் / வீடியோ நீக்கப்பட்டுவிடும்.
• நீங்கள் பயன்படுத்தாத Facebook account – களை முழுமையாக Delete செய்யவும். Deactivate செய்ய வேண்டாம்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் Digital India/Cashless economy திட்டத்தில் உள்ள தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் விரிவாகக் காண்போம்.
தொடர்புக்கு:
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். , இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.