உணவு பயிரிடும் நிலம் சுருங்கி விட்டது!

நடப்புப் பருவத்தில் இதுவரையிலுமாக, நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் உணவு தானியங்கள் பயிரிடுவதில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

நடப்பு வேளாண் பருவத்தில் இதுவரையிலுமாக 30 லட்சத்து 72 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. 4 லட்சம் ஹெக்டேரில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

10 லட்சத்து 42 ஆயிரம் ஹெக்டேரில் உணவு தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன. 10 லட்சத்து 77 ஆயிரம் ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்களும் 52 லட்சத்து 22 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பும் பயிரிடப்பட்டுள்ளன.31 லட்சத்து 38 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.

8 லட்சத்து 10 ஆயிரம் ஹெக்டேரில் சணல் பயிரிடப்பட்டுள்ளது என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே வேளை பருவ நிலை மாற்றம் காரணமாக தவறிப் பெய்யும் மழை, விளைச்சலில் சிக்கலை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் கரும்பு, பருத்தி ரகங்கள் பயிரிடும் நிலத்தின் அளவு அதிகரித்தும் உணவு விளைச்சலுக்கான நில அளவு குறைவாகி விட்டதும் உணவு உற்பத்தியில் பின்னடைவாக பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.