அன்சர் ஷேக் I.A.S. வயது 21.

பெயரளவில் இல்லாமல் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக உறுதியாக முயற்சி செய்வேன்.
அன்சர் ஷேக் I.A.S. வயது 21.
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு நமது நாட்டில் உள்ள கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த தேர்வை எழுதினாலும் இறுதியில் சில நூறு நபர்களே வெற்றி பெறுகிறார்கள்.
கடின உழைப்பு, வழிகாட்டல் மற்றும் விடாமுயற்சி ஆகியவை சரியான முறையில் ஒருங்கிணைந்து இருந்தால் மட்டுமே UPSC தேர்வு எழுதுபவர்கள் அந்த தேர்வில் வெல்ல முடியும்.
மேற்கூறப்பட்ட தகுதிகள் எதுவும் இல்லாமல் பண வசதியும், மற்ற அனைத்து வசதிகளும் இருந்தாலும், IAS தேர்வில் வெற்றி பெற இயலாது.
ஆனால் சில உறுதியான மற்றும் ஆர்வத்துடன் ஊக்கமாக முயற்சிக்கும் தேர்வாளர்கள் அவர்களுக்கு எதிராக அடுக்கடுக்கான முரண்பாடுகள், சிக்கல்கள், சிரமங்கள், பிரச்சனைகள், இருந்தாலும் வெற்றி கோட்டை முத்தமிட்டு தங்களது அடுத்த கட்ட வாழ்க்கை சிறப்பானதாக மேம்படுத்திக் கொள்வார்கள். அத்தகைய ஊக்கமளிக்கும் ஒருவர்தான் அன்சர் அஹ்மத் ஷேக், 2015 ஆம் ஆண்டின் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் தனது முதல் முயற்சியில் வெற்றி பெற்று இன்று மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு மாவட்டத்துக்கு கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் தனது 21 வயதிலேயே! 22 வயதில் ஐ.ஏ.எஸ். ஆன ரோமன் ஷைனியின் சாதனையை முறியடித்து இவர் 21 வயதில் ஐ.ஏ.எஸ். ஆகியுள்ளார்.
மகாராஷ்டிராவின் வறட்சியான பகுதி, அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்த மராத்வாடா பகுதியில் உள்ள ஜல்னாவின் ஷெட்காவ்ன் கிராமத்திலிருந்து வந்தவர். அவரது தந்தை யூனுஸ் ஷேக் அஹ்மத். அவரது தாய் வயல்களில் வேலை செய்தார். அவரது இளைய சகோதரர் அனீஸ் நிலையான எட்டாவதோடு பள்ளிப் படிப்பை நிறுத்தியவர். அனீஸ் ஒரு கடையில் வேலை செய்து அவரது குடும்பத்திற்கும் மற்றும் அவருடைய சகோதரர் IAS தேர்வு எழுதவும் உதவியுள்ளார்.
கல்வி முதன்மைப்படுத்தப்படாத குடும்பத்திலிருந்து வந்த அவரது வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.
எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்கொள்ளாமல் அவர் வெற்றி பெறவில்லை. நகரத்தில் விடுதி மற்றும் உணவுக்காக ஒரு கட்டத்தில் தனது பெயரை ஷுபம் என்று இந்து பெயராக மாற்றிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். "நான் என் பெயர் ஷுப்ஹம் என்று சொன்னேன், அது என்னுடைய நண்பரின் பெயராக இருந்தது. இப்போது என் உண்மையான பெயரை மறைக்க வேண்டிய அவசியமில்லை" என்கிறார் அன்சர் ஷேக் ஐ.ஏ.எஸ்.
மேலும் அவர் சொல்கிறார் நான் மூன்று வெவ்வேறு பிரிவுகளால் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவன்.
1. வளர்ச்சியடையாத பிராந்தியத்திலிருந்து வந்திருக்கிறேன்.
2. ஏழை பொருளாதார பின்னணியிலிருந்து வந்திருக்கிறேன்
3. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன்
இந்தப் பிரச்சனைகளை நெருக்கமாக பார்த்திருக்கிறேன் என்னால் இந்த பிரச்சனைகளை நிர்வகிக்க முடியும்.

அன்சர் ஷேக் அவரது ஐ.ஏ.எஸ். வெற்றி குறித்து சொல்லும் போது : “கடின உழைப்புக்கு மாற்றாக எதுவும் இல்லை.” நான் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் நான் சிரமப்பட்ட நேரங்களில் எனது நண்பர்களும் நான் பயின்ற பயிற்சி அகாடமியும் எனக்கு உதவினார்கள் என்கிறார். மேலும் 30 வயதான ராகுல் பாண்டே என்ற ஆசிரியரின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவும் அவருக்கு கிடைத்தது.

அவரது கனவை உண்மையாக்க கடின உழைப்பு, குடும்பம் மற்றும் நண்பர்கள் உதவி ஆகியவை இருந்தாலும், அது எல்லாவற்றையும் விட, மற்றவர்களிடமிருந்து தன்னைத் தானே மாற்றி அமைத்துக் கொள்கிற மனோபாவம், தனது கனவை அடைய முயற்சிக்காமல் இருப்பது பின்வாங்குவதற்குச் சமம் என்ற எண்ணம் ஆகியவற்றால் தனது இலக்கை (GOAL) அடைய தன்னைத் தானே முனைப்படுத்தி கொண்டே உழைக்கும் தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது.
நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது?
நமக்கான கனவு இலக்கு.
அதை அடையும் ஊக்கமான முயற்சி.