வைகோ, மதிமுக தலைவர்

மத்திய அரசு பல்வேறு வகைககளில் தமிழகத்துக்கு கேடு செய்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வருகின்றன. தமிழக விவசாயிகளை, மக்களை பாதிக்கிற திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து தீர்ப்பாயத்தில் வாதாடி வருகிறோம். ஆனால் தீர்ப்பாயத்தையே கலைத்துவிடும் முடிவிற்கு மத்திய அரசு வந்துள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்றி பல லட்சம் கோடி ரூபாயை சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். பொதுமக்கள் விவசாயிகள் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. கோவையில் 1960-ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்ட 132.7 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் மத்திய அரசு அச்சகத்தை மூடிவிட்டு வடமாநிலத்தில் இயங்கும் அச்சகத்துடன் இணைக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.