கவிஞர் வைரமுத்து

மருத்துவத்தில் இந்தியா இன்னும் பல படிகளைக் கடக்கவேண்டி இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்தியாவில் 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். இன்னும் 6 லட்சம் மருத்துவர்களுக்கான தேவையும், வெற்றிடமும் இந்தியாவில் இருக்கிறது. அவர்களை உருவாக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.
உள்ளுறுப்புகளின் நன்மை, தீமைகளைக் காட்டும் கண்ணாடிதான் தோல். ஓர் ஆசானைப் போன்றவர் மருத்துவர். மாணவர்களைப் போன்றவர்கள் நோயாளிகள். மருத்துவர்கள் நோய் குறித்த புரிதலை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். தனக்கு என்ன நோய் என்று தெரியாமலேயே ஒருவர் இறப்பது மரணத்தைவிட கொடுமையானது.