சரவணன் சந்திரன், எழுத்தாளர்

இந்திய மருத்துவத் துறையைச் சீரமைக்கப் போகிறோம் என்று சொல்லி, நீட் போன்ற தேர்வுகளைக் கொண்டுவருவதில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால், சாதாரண கொசுவை ஒழிக்கும் விஷயத்தில் கூட இந்த 70 ஆண்டுகளில் எந்த மைல்கல்லையும் எட்டவில்லை என்பதை யோசிக்கும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது.