வைத்தியநாதன், நீதிபதி உயர் நீதிமன்றம்

அனுமதியின்றி பேனர் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் நிறுவப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். அப்படி அகற்றும்போது, யாராவது ஆட்சேபித்தால், அவர்களைப்பற்றி போலீஸாருக்கு பெயர் முகவரியுடன் புகார் அளித்தால் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள். தனியார் சுவர்களில் அனுமதி இன்றி பேனர், சுவரெழுத்துகள் எழுதக் கூடாது. பொது இடங்களை மாசுப்படுத்த அனுமதிக்கக்கூடாது. பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், விளம்பர போர்டுகள் வைப்பதற்கு, அதிகாரிகள் அனுமதி அளித்தாலும், அவற்றில், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம் பெறாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். ‘ஸ்பான்சர்’ செய்பவர்களின் புகைப்படமும், இடம் பெறாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்.