மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க வலியுறுத்துவது தனிநபர் உரிமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். அவ்வாறு இணைக்கப்பட்டால் கணவன் - மனைவியிடையே நடைபெறும் உரையாடலும் அந்தரங்கம் இல்லாமல் போய்விடும். பொதுவெளிக்கு செல்லக் கூடாத வகையில் சில விஷயங்கள் உள்ளன. நான் என்னுடைய மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க மாட்டேன்.