டி.என்.கோபாலன், மூத்த பத்திரிக்கையாளர்

ஹாதியாவின் வழக்கு பூதாகார உருவம் எடுத்திருப்பதற்கு முக்கிய காரணம் மோடி ஆட்சியே. இந்து மத மேலாதிக்க உணர்வுகள் பொதுவாழ்வின் அனைத்து அம்சங்களையும் உக்கிரமாக அரித்துக் கொண்டிருக்கின்றன. நீதிமன்றங்களும் இதற்கு விலக்கில்லை. ஹாதியா திருமணத்தை ஒரு நீதி மன்றம் தடாலடியாக ரத்து செய்கிறது, இன்னொன்று ஆமை வேகத்தில் சென்று மூன்று நான்கு மாதங்கள் கழித்தே அப்பெண்ணை அழைத்து என்ன விவரம் என கேட்கிறது. மதமாற்ற நடவடிக்கைகளில் இறங்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது, மாறவும் தான், ஆனால் இன்றைய சூழலில்  இஸ்லாம் குறித்த அவநம்பிக்கை பரவலாக எழுந்திருக்கும் நிலையில், இஸ்லாமிய அமைப்புக்களும் இந்திய யதார்த்தங்களை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.”