ராஜ்தீப் சர்தேசாய், பிரபல பத்திரிகையாளர்

“பணம் பாடாது, நடனமாடாது. ஆனால், கண்டிப்பாகப் பணம் பேசும், வாக்களிக்கும். மிதமிஞ்சிய நம்பிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆர். கே. நகர் தேர்தலில் வெற்றி பெறுகிறார். மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டில் இருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது. டெல்லி தர்பாரை எதிர்த்து நிற்பவர்களை தெற்கில் உள்ளவர்கள் ஆதரிக்கிறார்கள். “இந்தியாவின் ஒரு மூலையான தமிழ்நாட்டில் மோடி மற்றும் அமித் ஷாவின் மாயாஜாலம் வேலை செய்யாதெனத் தெரிகிறது.”
எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கவிழுமா? திமுக பாஜகவுடன் நெருக்கம் பாராட்டுமா அல்லது காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடருமா? அம்மாவின் வாரிசாக டி.டி.வி.தினகரன் ஆவாரா? 2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்குத் தமிழ்நாடு வழிவகுக்குமா? என “ஆர்.கே.நகர் தேர்தல் பதில்களைவிட கேள்விகளையே அதிகம் எழுப்பி இருக்கிறது.”