ப.சிதம்பரம் , முன்னாள் மத்திய அமைச்சர்

“பிரதமரின் கூற்றுபடி, பக்கோடா விற்பது ஒரு வேலைதான். அப்படிப் பார்த்தால், பிச்சை எடுப்பதும் ஒரு தொழில்தானே. ஊனத்துடன் பிச்சை எடுப்பவர்களையும் வேறுவழியின்றி கையேந்துபவர்களையும் வேலையுள்ளவர்கள் என்ற பட்டியலில் சேர்க்க முடியுமா. உண்மையான வேலைவாய்ப்பு என்பது உறுதியானது; நிரந்தரமானது; முக்கியமாகப் பாதுகாப்பானது! அப்படி எத்தனை வேலைவாய்ப்புகளை இந்த அரசு உருவாக்கியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பார்களா?”