ராகுல், காங்கிரஸ் தலைவர்

"கர்நாடகத்தில் இதற்கு முன்னர் இருந்த பா.ஜ.க. ஆட்சி ஊழலில் உலக சாதனை படைத்தது. பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக ஊழல் வெளிவந்தது. அதனால்தான் 5 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சியில் 3 முதல்வர்கள் பதவியேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பிரதமர் மோடி இங்கு வந்து ஊழல் பற்றி பேசுகிறார். "நாட்டு மக்கள் பிரதமரிடமிருந்து எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவரோ நாடாளுமன்றத்தில் ஒருமணி நேரம் நீண்ட உரையாற்றியும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் மற்றும் விவசாயம் குறித்து பேசாமல், காங்கிரஸ் கட்சிமீது குற்றம்சாட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். இதேபோல் ரஃபேல் விமான ஒப்பந்தம் முதலில் அரசு நிறுவனத்திடமிருந்தது. தற்போது அதை பறித்து தனது நண்பருக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளார்."