அருந்ததி ராய், எழுத்தாளர்

“பயமுறுத்துதல் ஃபாசிசத்தின் குழந்தை”. நம் குழந்தைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் முட்டாள்தனமான விஷயங்களைப் புத்தகங்களில் சொல்லிக்கொடுக்கிறார்கள். நம்முடைய நரம்புகளில் மதவாதம் செலுத்தப்பட்டு, ரத்தத்தை விஷமாக்கி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் பயமுறுத்தப்படுகிறார்கள். மில்லியன் கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே பயப்படும் காலகட்டத்தில் வாழ்ந்துவருகிறோம். எனவே, மக்களுக்குத் தைரியத்தை எப்படிக் கடத்தமுடியும் என்பதைப் பார்க்க வேண்டும். நர்மதாவில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் பாருங்கள். அந்த நதியிலிருந்த நீர், மக்களுக்கு அதிகம் பயன்பட்டு வந்தது. தற்போது, நீர்த்தேக்கங்களில் தேக்கிவைக்கப்பட்டு, பணக்காரர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. “கட்டாயம் நாம் சில நேரங்களில், எவ்வளவு தைரியமானவர்கள் என்று காட்டவேண்டும்.