மம்தா பானர்ஜி, மாநில முதல்வர் மேற்கு வங்காளம்

மத்திய அரசு நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு எனும் மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா சட்டமானால், மக்கள் வங்கியில் செலுத்திய பணத்துக்கு பாதுகாப்பு இருக்காது. மக்களின் பணத்தை மத்திய அரசு கொள்ளையடிக்க முயன்றால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். வங்கியில் இருக்கும் எங்களின் பணம் பாதுகாப்பாக இல்லை. வங்கியில் பணம் பாதுகாப்பாக இல்லாத போது, பக்கோடா எப்படி சாப்பிடமுடியும்? நாம் இந்துக்களாக இருந்தாலும், அனைத்து மதங்களும் சமமான முக்கியத்துவம், அளித்து மதிக்கிறோம். ஆதலால், பாஜகவிடம் இருந்து இந்துத்துவத்தை கற்றுக்கொள்ள தேவையில்லை. இந்துக்கடவுள்களை தூக்கி சாலையில் எறிந்து இந்துக்களை பாஜகவினர் புண்படுத்துகிறார்கள். அதனுடன் அரசியல் விளையாட்டு நடத்துகிறார்கள்.