அசாதுத்தீன் ஒவைசி, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர்

இங்கே முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்கப்படுகிறது. காஷ்மீர் மக்கள் மீது இந்த சந்தேகம் விதைக்கப்படுகிறது. ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். அதில் 5 பேர் முஸ்லிம்கள். ஆனால், முஸ்லிம்கள் கொல்லப்படும்போது மட்டும் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். ஏன் இந்த விஷயத்தில் மட்டும் அனைவரும் பேசாமல் மவுனம் காக்கிறார்கள்?. நாங்கள் எங்கள் உயிரை நாட்டுக்காக தியாகம் செய்துள்ளோம், தீவிரவாதிகள் ராணுவத்தினரையும் கொலை செய்துள்ளார்கள், முஸ்லிம்களையும் கொலை செய்துள்ளனர். அவர்கள் யாரையும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கவில்லை. அவர்கள் அனைவரையும் இந்தியர்களாகப் பார்க்கிறார்கள். ஆனால், இன்னும் சிலர் முஸ்லிம்களின் தேசப்பற்றை பற்றி சந்தேகம் கொள்கிறார்கள்.