முருகவேல், எழுத்தாளர்

காலனியாட்சிக்கு முன்பு காடு முழுவதும் பழங்குடி இனங்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. ஆங்கில ஆட்சி பழங்குடி மக்களிடையே தனி உடமை பற்றிய பட்டயங்களோ ஆவணங்களோ இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு பெரும்பகுதி காடுகளை பேரரசின் பயன்பாட்டுக்கு என்று ரிசர்வ் காடுகளாக அறிவித்தது. பழங்குடி மக்களை வெள்ளை அரசு பணயக் கைதிகளாகவே பயன்படுத்தியது. சுதந்திர இந்தியாவிற்க்குப் பின்னும் நிலமை மாறவில்லை. கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு “மது” என்ற ஒரு மனிதன் மட்டுமே நம் பார்வைக்கு வந்தவன். உண்மையில் தங்கள் உலகுக்கும் இந்த பேராசைக்காரகள் உலகுக்கும் இடையே ஒரு மாய உலகில் வாழ்பவர்கள் பழங்குடிகள்.