எஸ்.எஸ்.ராஜகோபாலன், கல்வியாளர்

முதல்வர் ஆகும் கனவில் உள்ள ஒருவர் மாணவர்கள் படிக்க வேண்டும்,அரசியல்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். அது ஒரு தனியார் கல்வி நிறுவனம். தகுதிக்கு மாறாக பணம் கொடுத்து சேர்ந்தவரே பெரும்பாலான மாணவர். நலிந்தோர், தலித் ஆகியோர்க்கு அங்கு இடமில்லை. படிக்க வேண்டும் என்று சொன்னவர் என்ன படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.மாணவர்கள் உரிமை ஏதுமில்லாத அடிமைகளா. அவர்களில் பெரும்பாலோர் வாக்காளர்கள். அரசியல் தெரியாது எவ்வாறு வாக்களிப்பர். அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை கூடாது என்று சொல்வது சட்ட விரோதமல்லவா.