கௌசல்யா சங்கர், சமூக செயல்பாட்டாளர்

நினைவேந்தலுக்கு பொதுவெளியில் அனுமதி கேட்டால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் என்று கூறி அனுமதி கொடுக்க மறுக்கிறது காவல்துறை. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கத்தானே நீங்கள் இருக்கிறீர்கள். எங்களுக்குப் பாதுகாப்பு தருவதைவிட வேறு என்ன வேலை உங்களுக்கு இருக்கிறது என்று நான் கேட்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கேட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிச் செல்வதற்கு நான் ஒன்றும் கோழை அல்ல. பெரியாரின் பேத்தி.
இங்கு கூடியிருக்கும் நமக்குள் கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கலாம். ஆனால், இலக்கு வேறுபாடு இருக்காது என்று நம்புகிறேன். சாதி ஒழிப்புக்கு, தமிழும் தமிழர் உரிமைக்கான போராட்டங்களுமே அடிப்படையாக இருக்கிறது.