ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்

எடியூரப்பாவை போல் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவும் ராஜினாமா செய்யலாம். இந்தியாவை விடவும், உச்ச நீதிமன்றத்தை விடவும், நமது அரசியல் அமைப்புகளை விடவும் பிரதமர் மோடி ஒன்றும் பெரியவர் இல்லை. இந்த விவகாரத்தில் இருந்து பாஜக.வும், ஆர்எஸ்எஸ்.சும் பாடம் படித்து இருக்கும் ஏனெனில், எம்எல்ஏ,க்களை விலைக்கு வாங்குவதை பிரதமரே நேரடியாக அனுமதித்தார். ஊழலுக்கு எதிராக போராடுவதாக பேசும் அவரே ஊழலில் ஈடுபடுகிறார். மோடியும், அமித்ஷாவும் எந்த அரசியல் அமைப்புகளையும் மதித்ததில்லை. பேரவையில் தேசிய கீதம் பாடும்போது பாஜக எம்எல்ஏக்கள், சபாநாயகர் வெளியேறியதைமக்கள் நேரடியாக பார்த்தார்கள். அரசியல் அமைப்பு மீது அவர்களுக்கு மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது.