சிவசேனா கட்சி, சாம்னா பத்திரிக்கை

பிரதமர் மோடி காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்று மேடை தோறும் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரலாம், பாஜகவால் காங்கிரஸை ஒழிக்கக் கூட முடியும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் சிந்தனைகள் ஒருபோதும் சாகாது. காங்கிரஸ் கட்சியின் தகுதிகளை ஈர்த்துக்கொண்டு, அதை அழிக்க பாஜக முயல்கிறது.
கோடிக்கணக்கான பணம் இந்த தேர்தலில் புழங்குகிறது, பிடிபடுகிறது. பாஜகவுக்கு இந்த அளவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது ஒன்றும் ரகசியம் அல்ல, அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். இப்போது பாஜக ஆட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர மோசடி மூலம் தேர்தல் வெற்றிக்கு முயற்சிக்கிறது. இப்போது இருக்கும் தேர்தல் முறையையும், மின்னணு வாக்குப்பதிவு முறையையும் மக்கள் விரும்பவில்லை. பாஜக காங்கிரஸை தோற்கடிக்கவில்லை, ஆனால் பாஜக அதை தனக்குள் இணைத்துவிட்டது.