பிரகாஷ் ராஜ்

தூத்துக்குடியில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டவங்களுக்குப் பிரதமர் மோடி ஏன் இரங்கல்கூட தெரிவிக்கல? அவர் தமிழர்களுக்குப் பிரதமர் இல்லையா? இனிமே இந்தியாவோட தேசிய விலங்கு புலியா, பசுவா? அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சார்கிட்ட கேட்கிறேன்... மாநிலத்தில் ‘சிஸ்டம் சரியில்லை’னு கொதிச்சிப்போய் அரசியலுக்கு வந்திருக்கிற நீங்க, தமிழ்நாட்டுல பினாமி அரசாங்கம் நடத்துற பாஜக-வை ஏன் ஒரு வார்த்தைகூட கண்டிக்கலை? மாநிலத்துல சிஸ்டம் கெட்டுப்போயிருச்சினா, மத்தியில் சரியா இருக்கா? வணக்கம், ‘உலக நாயகன்’ கமல் சார்.. இது உங்களுக்கு... பலவீனமான மாநில அரசை சாட்டையை எடுத்து விளாசுறீங்க. ஆனா, மத்திய அரசு பத்தி மட்டும் ரொம்ப மென்மையா விமர்சனம் செய்றீங்க... ஏங்க? இப்படி நிறைய கேள்விகள் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டுல கேள்வி கேட்டா வாயிலே சுடுவோம்னு இப்ப பதில் சொல்லி இருக்கு தமிழக அரசு. துப்பாக்கிக் குண்டுகளைவிட மக்களோட கேள்விகளுக்கு சக்தி அதிகம்னு புரிய ரொம்ப நாள் ஆகாது!
பாஜக தலைவர்களின் குரல் என்னவோ, அதையே ரஜினிகாந்த் பிரதிபலிக்கிறார். ஆகாதவர்களை தேச விரோதி, சமூக விரோதி என்று முத்திரை குத்துவது ஆபத்தானது. கடைசி நாளில் சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தைக் கெடுத்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். 100 நாட்கள் மக்கள் அற வழியில் போராடும்போது, ரஜினி என்ன செய்துகொண்டிருந்தார்? மக்களோடு மக்களாக நின்று அற வழியில் போராட்டத்தை நடத்த வேண்டியதுதானே? அவரை யார் தடுத்தார்கள்? நீண்டகாலமாக நடக்கும் மக்களின் நியாயமான போராட்டத்தைக் கண்டுகொள்ளாத அரசுகளும், அதை அமைதியாக வேடிக்கைபார்த்தவர்களும்தான் என் பார்வையில் சமூக விரோதிகள்.