சீமான், நாம் தமிழர்

‘’அரசாங்கம் கருத்துக் கேட்பதுபோலத்தான் நாங்களும் கருத்துக் கேட்கிறோம். இந்தத் திட்டத்துக்காக 90 சதவிகித மக்கள் விரும்பித்தான் நிலத்தைக் கொடுத்தார்கள் என முதல்வர் சொல்கிறார். அப்படியென்றால், அந்த மக்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது. எட்டு வழிச் சாலை என்பது வேகப் பயணம் அல்ல, அது வேகமான மரணம். காரைப் பற்றி கவலைப்படுபவர்கள் நீரையும் சோறையும் பற்றிக் கவலைப்படுவதில்லை. பேரழிவை நோக்கி இந்த தேசம் நகர்ந்துகொண்டிருக்கிறது. எட்டு வழிச் சாலைபற்றிப் பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா? எட்டுவழிச் சாலை போன்ற ஒப்பந்தங்களின்மூலம் பணத்தைக் குவிக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாடு திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது.