சைலேந்திர பாபு, இந்தியக் காவல் பணி அதிகாரி.

ஒருவர் யாராக இருந்தாலும், வன்முறையில் ஈடுபடும் கும்பலுடன் சேர்ந்ததும் அவர் தன்னுடைய அறிவின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, கும்பலின் அறிவுக்குக் கட்டுப்பட்டவராகிவிடுகிறார் என்கிறார் குஸ்தாவ். அந்தக் கும்பலில் பல தலைகள் இருந்தாலும் ஒன்றுக்கும்கூட அப்போது மூளையிருக்காது! நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மக்களிடம் இருந்த அதே கொலைவெறி மனப்பான்மை இப்போதும் தொடருவது துரதிருஷ்டவசமானது. வதந்திகள் பரவத் தொடங்கும்போதே அது உண்மையல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், கும்பல்கள், சந்தேகப்படுகிறவர்களை அடிக்கத் தொடங்கிவிடும். வதந்திகள் உலவத் தொடங்கிய உடனேயே சமூக ஊடகங்களில் அதை மறுத்துத் தொடர்ந்து தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.