உமர் ஹாலித், சமூக செயல்பாட்டாளர்

"தோழர்களே, உங்களுக்கு நான் ஆலோசனை கூற வேண்டிய தேவையில்லை. நாம் அஞ்ச வேண்டிய, பதட்டப்பட வேண்டிய தேவையில்லை. அவர்களிடம் பெரும்பான்மை இருக்கலாம், நாடாளுமன்றத்தில் நிறைய சீட்டுகள் இருக்கலாம், அரசு இயந்திரம் காவல்துறை, இராணுவம் இருக்கலாம், இருந்தும், அவர்கள் கோழைகள். அவர்கள் நம்மை கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் நமது போராட்டங்களை கண்டு அஞ்சுகிறார்கள். நாம் சிந்திக்கிறோம் என்பதே அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது."