திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

இந்தியாவெங்கும் கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் 163 மகளிரியல் துறைகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர், ஆய்வு மாணவர்களும், முதுநிலை மாணவர்களும் பல்லாயிரக் கணக்கில் கல்வி பயின்று வருகின்றனர். இவையாவும் பல்கலைகழக மானியகுழுவின் (யுஜிசி) ஐந்தாண்டுத் திட்ட நிதிநல்கையின்கீழ் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்பட்டுவந்தன. சில நாட்களுக்கு முன்னால் திடீரென 2017 செப்டம்பரோடு இந்தத் திட்டங்களுக்கான நிதி நிறுத்தப்படும் என அது அறிவித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள மகளிரியல் துறைகள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. மகளிரியல் துறைகள் மூடப்படுவது வெறுமனே நிதிசார்ந்த பிரச்சனை அல்ல அது மத்தியில் ஆளும் பாஜக அரசின் மகளிர் விரோதக் கொள்கையின் வெளிப்பாடாகும். இதை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டும்.