அ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர், சமூக ஆய்வாளர்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு தனிமனித சுதந்திரத்தையும் தனிமனித உரிமைகளையும் உறுதியளித்தாலும்கூட, மேற்கு நாடுகளில் இருப்பதுபோல், தனிமனிதனின் அந்தரங்கத்தையும் உரிமையையும் பாதுகாக்கும் பிரத்தியேகச் சட்டங்கள் இங்கு இல்லை.
உலகின் எல்லா இணையச் செயல்பாடுகளும் அமெரிக்கக் கண்காணிப்புக்கு உட்பட்டவைதான் என்பதை ஸ்னோடன் அம்பலப்படுத்தினார். ஒரு நாட்டின் தலவல்கள் ஓர் இடத்தில் குவிப்பது தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலானது என்று பல கணினி வல்லுநர்களும் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள்.
இதனால் மக்களுக்குப் பயன் உள்ளதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், ரூ. 3,000 கோடி என்று தொடங்கிய இந்தத் திட்டம் இன்று ரூ. 1,50,000 கோடி வரை மக்களின் வரிப் பணத்தை விழுங்கி நிற்கிறது. இந்த அட்டைக்குப் பின்னால் ஸ்மார்ட் கார்டு தொழிற்குழுமங்கள், மென்பொருள் நிறுவனங்களின் பெரும் நலன்கள் உள்ளதும் அம்பலப்படுத்தப்பட வேண்டியது.