தா.பாண்டியன்

நீட் தேர்வு, காவிரி விவகாரம் போன்றவற்றில் தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. தமிழகத்தின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் மத்திய அரசின் காலடியில் தமிழக அரசு வைத்துவிட்டதால், தமிழகம் சுயமரியாதையையும், சுயஉரிமையையும் இழந்து தவிக்கிறது. இதன் பின்னணியில் பாஜகவின் செயல்பாடு உள்ளது.
முத்தலாக் முறைக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் பாஜக, காவிரி நீர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாதது ஏன்? இந்தியா முழுவதிலும் மதசார்பற்ற அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பாஜகவை விரட்ட வேண்டும். தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவை காலூன்ற விடமாட்டோம். வரும் மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்க்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து பயணிப்போம்