‘பரிணாம கோட்பாடு’ பாடத்தை நீக்கிய துருக்கி

சார்ல்ஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி தொடர்பான கோட்பாடு குறித்த ஒரு பகுதி, 9-ஆவது வகுப்பின் (14 மற்றும் 15 வயது மாணவர்கள்) உயிரியல் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்படுவதாக துருக்கி கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்ட வாரியத்தின் தலைவர் அல்பாசலான் துர்மஸ் அறிவித்துள்ளார்.
தேசிய பாடத்திட்டம் தொடர்பாக முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் ஏற்கனவே ஒப்புதல் வழங்கி இருந்தார்.
‘’தங்கள் நாட்டு பாடத்திட்டத்தில் இருந்து பரிணாம கோட்பாடு குறித்த பாடத்தை சௌதி அரேபியாவுக்கு அடுத்த இரண்டாவது நாடாக துருக்கி நீக்கியுள்ளது.’’
கடவுள்தான் அனைத்தையும் படைத்தார் என இஸ்லாம் நம்புகிறது. மண்ணிலிருந்து ஆதாம் என்ற முதல் மனிதன் உருவாக்கப்பட்டான்; அவனின் விலா எலும்பிலிருந்து ஏவாள் தோன்றினாள் என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.