அமெரிக்காவில் ஆஃப்கன் மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

அதிபர் டிரம்ப் சமீபத்தில் சில இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தார். அப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் இல்லை. ஆனால் அமெரிக்கா செல்ல விசா விண்ணப்பித்த சில மாணவிகளின் விசாக்கள் ஏற்றுக் கொள்லப்படவில்லை.
அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை ஊக்குவிப்பதற்காக “ஃபர்ஸ்ட் க்ளோபல்” என்ற அமைப்பு நடத்தும் அந்த போட்டியில் 164 நாடுகளை சேர்ந்த குழுக்கள் ரோபோட்டிக் விளையாட்டுத் தொடரில் பங்கேற்றன. ஆஃப்கன் மாணவிகள் பந்துகளை பிரிக்கும் ரோபோ செய்திருந்தனர். பங்கேற்க வழியில்லாததால் வாஷிங்டனில் நடைபெற்ற போட்டியில் தங்கள் ரோபோ பங்கேற்றதை அந்த மாணவிகள் குழு காணொளி இணைப்பு மூலம் பார்த்தது.