பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்

காற்று மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், பிரிட்டனில் 2040ஆம் ஆண்டுவாக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது மின்சாரத்தில் ஓடும் கார்களின் விற்பனை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பிரிட்டனில் மக்களின் உடல்நலத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் காற்று மாசுபாடு முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகிறது. இதனால், 40,000 பேர் அகால மரணமடைவதாக அரசு தெரிவிக்கிறது.
பிரிட்டனைப் பொறுத்தவரை காற்றுமாசுபாடு குறைந்துவந்தாலும் காரின் புகையில் உள்ள நைட்ரஜன் ஆக்ஸைடு, பல நகரங்களில் பாதுகாப்பான அளவைத் தாண்டியுள்ளது. டீசல் கார்களே பெருமளவில் இதற்குக் காரணமாக உள்ளன. நைட்ரஜன் டை ஆக்ஸைடு அபாயகரமான அளவில் இருப்பதைக் கட்டுப்படுத்த புதிய திட்டங்களை வகுக்கும்படி அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. இதையடுத்தே, 2040வாக்கில் டீசல், பெட்ரோல், மற்றும் ஹைப்ரிட் (பெட்ரோலிலும் பேட்டரியிலும் ஓடும் வாகனங்கள்) வாகனங்களின் விற்பனையை நிறுத்த அரசு முடிவுசெய்தது.
“சுத்தமான காற்றை உடைய மண்டலங்களை ஏற்படுத்துவது, முழு நிதியுதவியுடநஅ டீசல் கார்களை அழிப்பதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆகியவையும் இந்த நடவடிக்கையில் இடம்பெற வேண்டும். டீசல் கார்களை ஒழிப்பதால் மக்கள் வேறு வகையான கார்களுக்கு மாறக்கூடாது. பதிலாக, அவர்கள் நடத்து செல்வதற்கும் சைக்கிளில் செல்வதற்கும் ஏற்ற வகையில் நகரங்களை மாற்றியமைக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து கட்டுப்படியாகவும் வகையில் இருக்க வேண்டும்“ என்கிறார் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் லூகாஸ்