நீரில்லா கழிப்பறைகள் : உரமாகும் மனிதக்கழிவு

ஒவ்வொரு தனி நபரும் நாளொன்று கழிவறையை பயன்படுத்திய பிறகு அதை சுத்தம் செய்ய 70 லிட்டர் நீரை பயன்படுத்துகிறார். ஆனால் தண்ணீர் இல்லாத, கழிவுநீர் கட்டமைப்பு இல்லாத சமூகங்களில் கழிப்பறைகளின் நிலை என்ன அவர்கள் என்ன செய்கின்றார்கள்?
ஜிம்பாப்வேயின் நகர் பகுதியில் உள்ள சில மக்கள் நீரை பயன்படுத்தாமல், மனித கழிவுகளை உரம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.
அவர்களது நீரற்ற கழிப்பறைகளில் மலம் கழித்த பிறகு அதன் மேல் சாம்பலை தூவுகிறார்கள். சாம்பல் கழிவுகளை சிதைத்து துவாடையை நீக்குகிறது. பின்னர் கழிவும் சாபலும் சேர்ந்த கலவை உரமாக பயன்படுத்தப்படுகிறது.