முதல் முறையாக இலங்கையில் குப்பையில் மின்சாரம்

கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள வத்தள, கெரவலபிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்கபடவுள்ள இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கு குப்பைகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தென் கொரிய நிறுவனமொன்றுடன் இணைந்து அமைக்கப்படும் இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களுக்காக 27 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதன் முலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளொன்றுக்கு 700 மெட்ரிக் டன் குப்பை பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.